Description of the Book:
நான் உற்றதும் கற்றதுமான சமூக அவலங்களான வறுமைக்கோடு, தீண்டாமை, குழந்தை தொழிளார்கள், முதியவர்கள், வேலைவாய்ப்பு, மனித தொடர்பு, மனிதம், சாதி, கொரோனா, அபார்ட்மெண்ட் வாழ்க்கை, மரங்கள் நடாத அவலம், போதைப் பழக்கம், இன்றைய கல்வி போன்றவற்றை புரியும் நடையில் புதுக்கவிதை வடிவத்தில் படைத்துள்ளேன்.
உன்னத உறவுகள் தாய், மனைவி, நண்பர்கள் பற்றியும் உயர்வாய் இன்றைய இளைஞர்கள் மனதில் நல்ல விதைகளை தூவியுள்ளேன். அந்த விதைகள் வளர்ந்து நல் அறுவடைக்காக காத்திருக்கின்றேன். நல்லதையே நினைப்போம்; நல் சமுதாயம் படைப்போம்.
உற்றதும் கற்றதும்
SKU: 9789357692236
₹110.00Price
Author's Name: Lakshmanan Velusamy About the Author: கவிஞர் 1961ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 2ஆம் நாள் மதுரையில் பிறந்தார். பள்ளிப்படிப்பை மங்கையர்க்கரசி மேல்நிலை பள்ளியிலும் இளங்கலை கணிதம் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும் முதுகலை கணிதம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும் பி.எட் மற்றும் எம்.எட் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியிலும் பயின்று பத்தாண்டுகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து பிறகு அரசு உத்தியோகத்தில் சேர்ந்தார் . கள்ளர் சீரமைப்புத் துறை அரசு கள்ளர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி 30/05/2020 அன்று பணி நிறைவு அடைந்தார். புதுக்கவிதைகளின் மீது உள்ள மோகத்தால், படித்தது கணிதம் எனினும் தமிழ் மேல் தாளாப் பற்று. அதனால் கவிதையின் மேல் ஆர்வம். அந்த ஆர்வமே கணிதம் பயின்றவன் கவிஞன் ஆனது. கவிஞரின் முதல் முயற்சியே இந்த "உற்றதும் கற்றதும்". Book ISBN: 9789357692236
.png)
